Thursday 26 January 2012

உனக்குள்ளே அமைதி

மக்குள்ளே  அமைதி என்பது எப்பொழுது வரும், முதலில் எப்போது போனது ஏன் போனது என அறிய வேண்டும், ஒரு பொருளை கண்டுபிடிக்க வேண்டுமெனில் அது எங்கே தொலைந்தது எப்படி தொலைந்தது என அறிய வேண்டும், ஒரு வேலை இந்த கேள்வி குழப்பமாக  அல்லது முட்டாள்த்தனமாக தோன்றலாம், காரணம் எதோ ஒன்றை சொல்வதாக கூறி எதோ ஒன்ற கூறி கொண்டிருக்கிறேன் என நினைக்கலாம் உண்மையில் உங்கள் இயல்பு நிலை என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சி.
சிறு வயதில் எப்படி இருந்தீர்கள் என்பதை உங்களால் தற்பொழுது இனி பார்க்க முடிகிறதா, எத்தனை அழகிய கனவுகள் கண்டு கொண்டிருந்தோம் ஆனால் தற்பொழுது எத்தனை கவலை பயம் ஏன் இப்படி, 


ஒரே ஒரு சிறு காரணம் இந்த நொடியை விட்டு விட்டு நமது மனம் எதிர்காலத்திலும் கடந்த காலத்திலும் சுழன்று  கொண்டிருப்பதே, 

இந்த நொடியில் நீங்கள் வாழ ஆரம்பித்து விட்டால் மனமற்று இருக்கலாம் எப்படி எனில் உங்களுக்கு பிடித்த வேலையை நீங்கள் மனமொன்றி செய்யும் பொது அந்த வேளையில் முழு கவனமும் இருக்கும் வேறு சிந்தனைகள் இருக்காது. 

மனம் நமது மீது ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கடந்த கால மற்றும் எதிர்கால நினைவுகள் மற்றும் கனவுகள், இவை இரண்டுமே உங்கள் கைகளில் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் நீங்கள் விழித்து கொண்டு விட்டீர்கள்.

விமானங்களில் கூட சில நூறு கிலோ வரை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி உண்டு. ஆனால் உங்கள் மனதை சற்று அலசி ஆராய்ந்து பாருங்கள் எத்தனை டன் கணக்கான கவலைகளை பயங்களை சுமந்து திரிகின்றீர்கள் என்பதை நீங்கள் பறக்க வேண்டுமெனில் உங்கள் லட்சியத்தை அடைய வேண்டுமெனில் தேவையற்ற சுமைகளை உதற தலைபடுங்கள்.
பூரண அமைதியை தேடி திரிய வேண்டியதில்லை உங்களுக்குள்ளே அது இருக்கிறது அடையாளம் காண வேண்டியது மட்டுமே உங்கள் வேலை, தேடி கூட கண்டடைய வேண்டியதில்லை என்பதுதான் வினோதம்,
உங்களை அறிவதால் அமைதி பெறலாம் ஏனென்றால் அமைதி என்பது மட்டுமே நமது இயல்பு.
அதற்க்கு முதலில்இந்த கணத்தில் வாழ பழகுங்கள்,கடந்த கால கசப்புகள் மற்றும் எதிர்கால கனவுகள் மூலம்  மனதிற்கு தீனி போடாதிர்கள், மனம் என்பது உங்கள் அடிமை அல்லது உங்கள் கைகளில் உள்ள கருவி என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை, காரணம் முடிந்த வரை கையில் இருப்பவற்றில் கவனம் செலுத்தி மனம் என்ற ஒன்ற வலிமை இழக்க செய்து மனதிற்கு அப்பால் உங்கள் தியான நிலை அதாவது அமைதி நிலைக்கு செல்லுங்கள்  

Wednesday 25 January 2012

உனக்குள்ளே

பெரும்பாலனவர்கள் நிம்மதி என்ற ஒன்றை தேடி எங்கெங்கோ அலைகின்றனர், முல்லாவின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது வெளியில் வெளியில் தொலைத்த ஒரு பொருளை வீட்டிற்குள் தேடுவார், அவரை போலவே நாமும் குருக்களிடமும் இன்னும் பலரிடமும் நிம்மதியை யாசித்து ஓடி கொண்டிருக்கிறோம், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கையறு நிலைக்கு இந்த அவசர வாழ்க்கை முறை நம்மை ஆட்படுத்தி விட்டது. 

புத்தரின்  மிக புகழ்பெற்ற ஒரு உபதேசம் அமைதியை வெளியில் தேடாதிர்கள் அது  உங்களுக்குள்ளே இருக்கிறது என்பதாகும், பலரும் தனக்குள்ளே தேட நேரமின்றி பல நூறு மைல்கள் சுற்றி அமைதியை தேடுவது சற்று வியப்பும் ஆச்சரியமும் அடைய செய்கிறது, இன்னும் சிலரோ தங்களுக்குள்ளே எப்படி தேடுவது என சரியான திசைக்காட்டி இன்றி தவிக்கிறார்கள் அதை தேடி கார்பரேட் குருமார்களிடம் சரணடைகின்றனர்.

நீங்கள் எந்த காரணத்தினால் உங்கள் அமைதியை இழந்து விட்டீர்கள் என ஒரு கணம் சிந்தித்ததுண்டா, அவ்வாறு இல்லையெனில் சற்று சிந்தியுங்கள் ஏதேனும் சில விஷயங்கள் பிடிபடும், அப்படியும் இல்லையெனில் இரண்டு காரணங்கள் மட்டுமே உங்கள் அமைதியை சீர்குலைக்கும் அது கவலை மற்றும் பயம் எதிர்காலம் குறித்த கவலை அல்லது பயம் அல்லது கடந்த காலம் குறித்த கவலை, இரண்டும் உங்கள் கைகளில் இல்லை கடந்த காலம் என்பது உங்கள் மனதின் படிமம், நீங்கள் எதிர்காலம் என நினைப்பது இந்த நொடியே தவிர வேறு இல்லை நேற்று நீங்கள் கனவு கண்ட எதிர்காலம் என்பதும் சரி இன்று நீங்கள் கனவு காணும் எதிர்காலமும் சரி இந்த நொடி மட்டுமே மற்றபடி அவற்றை உங்களால் அடைவதர்க்கில்லை,ஆங்கிலத்தில் இன்று என்பதற்கு பிரசென்ட் என பெயர், பிரசென்ட் என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு அது பரிசு இந்த நாள் உங்கள் பரிசு இதற்கும் அமைதிக்கும் என்ன உறவு தொடர்வோம் .



Saturday 21 January 2012

மனமென்பது

மனம் என்ற ஒன்றை பற்றி நமது வேதங்களும் உபநிடதங்களும் மிக அதிகமாகவே பேசுகின்றன, ஏறத்தாழ ஓயாமல் பேசும்  நமது மனதை போல, மேற்க்கத்திய மற்றும் பொதுவான பார்வை மனதை வெற்றி கொள் என்பதே ஆகும்,ஆகவே அவர்கள் தங்கள் வாழ்வில் உடலுக்கு வலிமை அதே சமயம் மனதை கட்டுபடுத்தும் வகையான பயிற்ச்சிகளை செய்கின்றனர், ஆனால் அவர்கள் தற்பொழுது கிழை நாடுகளின் ஆன்மீக பொக்கிஷமாகிய தியானத்தை நம்மைவிட மிக அதிகமாக போதிக்கின்றனர் அதே சமயம் அதனை வரவேற்று பயின்று அதனை கொண்டாடுகின்றனர்,முதலிலேயே ஒரு சிறிய ஆச்சரியம் அடைந்து இருப்பீர்கள் இல்லையென்றாலும் நானே சொல்லி விடுகிறேன் மனதை கட்டுபடுத்துவது தானே, நமது மதம் சொல்லும் பாதை ஆனால் மனதை கட்டுபடுத்துவது என்பது ஆரம்ப கட்டம் என்றே சொல்லலாம் அதன் பிறகு வேறு என்ன?